சத்தீஷ்கார்: பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி

சத்தீஷ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஷ்கார்: பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு வாகனம் கவிழ்ந்ததில் சி.ஏ.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மற்றொரு வீரர் காயமடைந்தார். இந்த சாலை விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரும் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுதொடர்பாக சி.ஏ.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், " நக்சல் பாதித்த பகுதியான சமாரி போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் நேற்று இரவு முகாம் மாற்றும் பணி நடந்து வந்தது. இதற்கிடையில், வீரர்கள் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 சி.ஏ.எப். வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com