உத்தரபிரதேசம்: பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

வெடி விபத்து சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெல்வாடா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல்மாடியில் பட்டாசுக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசுக் கடையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹிமான்ஷு (12 வயது), பராஸ் (14 வயது) ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்த வெடிவிபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

வீட்டின் உரிமையாளர் ஷதாப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com