அரியானாவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானாவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
Published on

சண்டிகர்,

அரியானாவில் உள்ள ஜஜ்ஜார் பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் லேசாக பதிவானதால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் அதிகாலை 12.46 மணியளவில் ரிகடர் 3.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com