உத்தரகாண்டில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 மற்றும் 3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்டில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 6.26 மணியளவில் ரிக்டர் 2.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.060 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 80.023 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து, உத்தரகாண்டின் பவுரி கார்வால் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இரவு 8.32 மணியளவில் ரிக்டர் 3.0 அளவில் ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com