உத்தரபிரதேச நிறுவனத்தில் அம்மோனியா விஷ வாயு கசிவால் 2 பேர் பலி

உத்தரபிரதேச நிறுவனத்தில் அம்மோனியா விஷ வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேச நிறுவனத்தில் அம்மோனியா விஷ வாயு கசிவால் 2 பேர் பலி
Published on

பிரக்யாராஜ்,

உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரின் அருகே இப்கோ நிறுவனத்தின் பல்பூர் பெர்டிலைசர் என்ற உர கம்பெனி செயல்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவில், அம்மோனியா விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த 3 ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 16 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் துணை மேலாளர் அபய் நந்தன் மற்றும் உதவி மேலாளர் வி.பி.சிங் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் இரவு எந்திர கோளாறு காரணமாக எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவசர பாதுகாப்பு குழுவினர் மற்றும் ஆபரேட்டர் குழு தைரியமாக போராடியதால் விஷவாயு கசிவு குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டு சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. சிகிச்சையில் உள்ள மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளது என்று இப்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com