ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு
Published on

ராஜஸ்தான்,

வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பரன் கிஷன்கஞ்ச் எனும் பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com