இமாச்சல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

போலீசார் நடத்திய சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இமாச்சல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது
Published on

சிம்லா

இமாச்சல பிரதேசம், நூர்பூர் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று மாத்தோலி பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போதைப்பொருள் கடத்திய சம்பா மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் தேகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com