3-வதாக காதலனுடன் ஓடிய மனைவியை சேர்த்து வைக்க கோரி முதல் இரண்டு கணவர்கள் புகார்

காதலனுடன் ஓடிய மனைவியை சேர்த்து வைக்க கோரி இரண்டு பேர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதனால் பரோசா சிறை போலீசார் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
3-வதாக காதலனுடன் ஓடிய மனைவியை சேர்த்து வைக்க கோரி முதல் இரண்டு கணவர்கள் புகார்
Published on

நாக்பூர்:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் வடிவேலு. இவரது காமெடிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பெரும் ரசிகர்களின் பட்டாளமே உள்ளது. வடிவேலு காமெடிகள் எப்போதும் சாதாரண மணிதர்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஒத்து போய் அமைவதே., இவரின் காமெடிகள் காலங்கள் கடந்து கொண்டாட காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில் வடிவேலுவின் காமெடி காட்சியை போல ஒரு சுவாரஸ்யமான சம்பவம்  நடந்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் பரோசா சிறை போலீஸ் நிலையத்தில் உள்ள காதலனுடன் ஓடிய மனைவியை சேர்த்து வைக்க கோரி இரண்டு பேர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். இதனால் பரோசா சிறை போலீசார் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

தேடப்பட்டு அந்தப் பெண் தனது முதல் கணவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 ஆமாண்டின் நடுப்பகுதியில் அந்தப் பெண், தனது இரண்டாவது துணையாக மாறிய கணவருடன் நட்பு கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் ஜோடியாக வாழ ஆரம்பித்தனர். முதல் கணவன் கொத்தனாராக இருந்தார் இரண்டாவது கணவர் பைபர் தொழில் செய்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தனது 'இரண்டாவது' கணவரின் வீட்டை விட்டு தனது சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றதிலிருந்து அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக ஊடகங்கள் மூலம் அவர் மூன்றாவதாக ஒருவரை காதலித்து வந்து உள்ளார். தற்போது அவர் அந்த 3 வது நபருடன் குடும்பம் நடத்தி வருகிறார். 3 வது நபரை பற்றிய விவரங்கள் போலீசாரிடம் இல்லை.

மூன்றாவது கணவருக்கு பாடம் கற்பிப்பதற்காக இரண்டாவது கணவரும் முதல் கணவருடம் தற்போது கூட்டு சேர முயற்சிக்கிறார்கள்.

பரோசா சிறை போலீசார் புகாரைப் பதிவு செய்யவில்லை, ஆனால் மூன்றாவது கணவன் மற்றும் பெண் குறித்து புகார் அளிக்க சோனேகான் போலீஸ் நிலையத்தை அணுகுமாறு வழிநடத்தி உள்ளோம்.குடும்ப வன்முறை எதுவும் இல்லாததால், உள்ளூர் போலீஸ் நிலையம் நிலையமானது நிலைமையைச் சிறப்பாகச் சமாளிக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com