காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரி கிஷ்த்வார் மாவட்டம் சத்ரூ அருகே பசர்குத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப்படையினர் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து என்கவுன்டர் நடத்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடந்திய சோதனையில் 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com