உ.பி.: ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
உ.பி.: ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் புதானா பகுதியில் உள்ள ஹிண்டன் ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர். சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கஜேந்திர பால் சிங் கூறுகையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. உயிரிழந்தவர்கள் லாரி டிரைவர் சோட்டி லால் மற்றும் ஒரு வியாபாரி நீல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாடுகாயமடைந்த ஜாதே மற்றும் அஜயை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com