

லக்னோ,
உத்திரப்பிரதேசம் மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனிஷ் (வயது 22). இவரின் தாய்வழி உறவான புஷோத்தம் (வயது 18) . இவரது தங்கையின் திருமண ஊர்வலம் இன்று சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
எனவே திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முனிஷ் அவரது குடும்பத்துடன் தனது தாத்தா- பாட்டியின் கிராமத்திற்கு சென்றார். இதையடுத்து திருமணத்திற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக, முனிஷ் தனது உறவினரான புருஷோத்தம் மற்றும் சக கிராமவாசியான ஷ்யாம் சிங் (வயது 18) ஆகியோருடன் ஒரு பைக்கில் உஷைத்கு சென்றார்.
இவர்களுடன் காதியா ஹர்தோபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலரும் மற்றொரு வாகனத்தில் சென்றனர். அவர்கள் அனைவரும் திருமணத்திற்கு தேவயான பொருள்களை வாங்கிவிட்டு படான் மாவட்டத்திலுல்ள கடர்சௌக் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இரவு சுமார் 11.30 மணியளவில் முனிஷ் உட்பட 2 பேர் வந்த பைக் கட்டுப்பட்டை இழந்தது. இதனால் அதிவேகமாக சென்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர்-டிராலீ மீது பயங்கரமாக மோதியது. இதில் முனிஷ் மற்றும் புருஷோத்தம் தலையில் படுகாயம் அடைந்தனர்.
தலையில் படுகாயமடைந்ததால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஷ்யாம் சிங் காயமடைந்தார். இவர்களுடன் வந்தவர்கள் உஷைத் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த ஷ்யான் சிங்கை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த 2 பேரின் சடலங்களும் போலீசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது. திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காவல் துறையினர் இது குறித்து விபத்து மரண வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று உஜானி வட்ட அதிகாரி சுனில் குமார் கூறினார்.