பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

மராட்டியத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் கமலேஷ்வர் பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலையில் மதியம் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முனீஷ் மதேவ், லெட்சுமி ராஜக் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com