ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள நவபோரா என்ற இடத்தில் பயங்ரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com