மராட்டியத்தில் காயங்கள் ஏதுமின்றி இறந்து கிடந்த சிறுத்தைகள்


மராட்டியத்தில் காயங்கள் ஏதுமின்றி  இறந்து கிடந்த சிறுத்தைகள்
x
தினத்தந்தி 20 Feb 2025 9:19 PM IST (Updated: 20 Feb 2025 9:56 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இரண்டு சிறுத்தைகள் சந்தேகத்திற்கு இடமாக காயமின்றி இறந்து கிடந்தன.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு பல வனவிலங்குகள் சுற்றித்திரிவது வழக்கம். ஆனால் வனத்துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அப்பகுதியில் இரண்டு சிறுத்தைகள் இறந்து கிடந்தனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நேற்று பிற்பகம் அட்கான் ஷிவர் பகுதியில் 7 முதல் 8 வயதுடைய இரண்டு ஆண் சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டனர். இந்த சிறுத்தையின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனால் அந்த சிறுத்தைகளுக்கு யாரோ விஷம் குடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்

1 More update

Next Story