ஒரே நாளில் 2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம்: 7 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

ஒரே நாளில் நடந்த இந்த இரு பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 2 சிறுமிகள் கூட்டு பலாத்காரம்: 7 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் 3 சிறுவர்கள் கூட்டு சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில் உப்பள்ளி டவுன் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களை கைது செய்தனர்.

அதுபோல் உப்பள்ளி அசோக் நகர் போலீஸ் நிலைய பகுதியிலும் சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அவரை தாக்கியுள்ளனர். மேலும் இதை தடுக்க வந்த சிறுமியின் தந்தையையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசோக் நகர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூருவில் ஒரே நாளில் நடந்த இந்த இரு பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெற்றோர் தங்களது குழந்தைகளின் நடமாட்டம், செயலை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சசிகுமார் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com