

சண்டிகர்:
பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் இரண்டு பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் எல்லை பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதிகாரி ஒருவர்இன்று தெரிவித்தார்.
பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று இரவு 8.48 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 ஊடுருவல்காரர்கள் நடமாட்டம் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும் அவர்கள் கண்டுகொள்ளாமல், ஊடுருவ முயன்றனர். இதனையடுத்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேரும் சுட்டு கொல்லப்பட்டனர்.