இமாசலபிரதேசத்தில் பனிப்பாதையில் வழுக்கி விழுந்து 2 பக்தர்கள் பலி

இமாசலபிரதேச மாநிலம் லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் டிரில்புரி கோரா பகுதியில் நேற்று அதிகாலையில் திடீர் பனிப்பொழிவு ஏற்பட்டது.
பனிப்பாதையில் வழுக்கி விழுந்து 2 பக்தர்கள் பலி.
Published on

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தில் பனிப்பாதையில் வழுக்கி விழுந்து 2 பக்தர்கள் பலியாகினர், 11 பேர் லேசான காயமடைந்தனர்.

பனிப்பாதையில் வழுக்கி விழுந்த பக்தர்கள்

இமாசலபிரதேச மாநிலம் லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் டிரில்புரி கோரா பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீர் பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது பரிக்ரமா சென்ற பக்தர்கள் பனியால் மூடப்பட்ட பாதையில் வழுக்கி விழுந்தனர்.

2 பேர் பலி, 11 பேருக்கு லேசான காயம்

இதில் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்த தாவா டோமா பூட்டியா (வயது 74), கெய்லாங்கைச் சேர்ந்த யாங்சின்(64) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் லேசான காயமடைந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்.டி.ஆர்.எப்.) விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கெய்லாங் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com