மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி... அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட 2 போலீசார்

இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி... அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட 2 போலீசார்
Published on

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களில் இரு போலீசார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்த்வா மாவட்டத்தில் உள்ள பத்மநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி தாம் காலனி அருகே, அன்சிங் நர்காவே என்ற காவலரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த முராரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், ரேவா மாவட்டத்தில் உள்ள குத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. 5 நாட்கள் விடுப்பில் இருந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், சத்தர்பூர் மாவட்டம் நவ்கான் பேருந்து நிலையம் அருகே உள்ள மூடப்பட்ட போலீஸ் அவுட்போஸ்ட்டில் இன்று காலை 6 மணியளவில் மற்றொரு காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்தவர் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த தருண் காந்தர்வ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நவ்கான் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com