ஆபாச வீடியோவுக்கு அடிமையான இரண்டு சிறுவர்களால் ஆறு வயது சிறுமி அடித்துக் கொலை

குற்றத்தை மறைத்து சாட்சியங்களை அழிக்க முயன்றதாக ஒரு சிறுவனின் தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆபாச வீடியோவுக்கு அடிமையான இரண்டு சிறுவர்களால் ஆறு வயது சிறுமி அடித்துக் கொலை
Published on

கவுகாத்தி

அசாமில் 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பெற்றோரின் மொபைல் போன்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தும் போது ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகி, ஆறு வயது சிறுமியை கல்லால் அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி பக்கத்தில் உள்ள கல்குவாரியின் பாத்ரூமில் மயங்கி கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்து. சிறுமியின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சிறுமி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தாள். அவரது உடலில் கற்களால் ஏற்படுத்திய காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து கல்குவாரிக்கு அருகில் இருந்தவர்களிடம் குடும்பத்தினரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி பாத்ரூமில் மயங்கி கிடப்பதாக 3 சிறுவர்கள் வந்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். போலீஸார் அந்த சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.போலீஸார் விசாரணைக்கு சென்றபோது அதில் ஒரு சிறுவனின் தந்தை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுவர்களே அந்த சிறுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஆபாச படம் பார்க்க சிறுமியை வற்புறுத்தியுள்ளனர். சிறுமி மறுக்கவே அவரை 11-வயது சிறுவன் தாக்கியுள்ளான். இதனையடுத்து வீட்டில் கூறிவிடுவேன் எனக் கூறியதால் ஆத்திரத்தில் மேலும் கற்களை கொண்டு இரண்டு சிறுவர்கள் தாக்கியுள்ளனர். அதில் சிறுமி மயக்கமடையவே 3 சிறுவர்களும் கல்குவாரி பாத்ரூமில் சிறுமியை தூக்கிச்சென்று போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஒரு சிறுவனுக்கு 8 வயது மற்ற இருவருக்கும் 11வயது என்பது அதிர்ச்சிகரமான தகவல்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 11வயது சிறுவன் ஆங்கில வழிக்கல்வி பயின்று வருகிறான்.கொரோனா தொற்று காரணமாக தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகிறது. தந்தையின் செல்போனில் இருந்துதான் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளான். அதில் செல்போன் ப்ரவுசிங் ஹிஸ்டரியில் ஆபாசப்படம் பார்த்த லிங்க் இருந்துள்ளது.

இதன்காரணமாக சிறுவனுக்கு ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த செல்போனை கொண்டு வந்து மற்ற சிறுவர்களுக்கும் ஆபாசப்படங்களை காட்டியுள்ளான். அப்போது சிறுமியை ஆபாசப்படம் பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளான். அந்த சிறுமி மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் வீட்டில் கூறிவிடுவேன் எனக் கூறியதால் ஆத்திரத்தில் 11 வயது சிறுவர்கள் அடித்துக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்றொரு எட்டு வயது சிறுவனும் சிறுமியை கொலை செய்ய உதவியதாக கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைத்து சாட்சியங்களை அழிக்க முயன்றதாக ஒரு சிறுவனின் தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவர்களின் வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே மிரண்டு விட்டனர். இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காத சிறுவன் தந்தையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com