மாணவிகளை விடுதியில் அடைத்து விடிய விடிய வாலிபர்கள் செய்த விபரீத செயல் ;அதிர்ந்த கேரளா

2 நாட்கள் கழித்து பள்ளிக்கு மாணவிகள் மிகவும் சோர்வுடன் வந்தனர்.
மாணவிகளை விடுதியில் அடைத்து விடிய விடிய வாலிபர்கள் செய்த விபரீத செயல் ;அதிர்ந்த கேரளா
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்த 2 பிளஸ் 1 மாணவிகளை அறையில் அடைத்து 2 நாட்களாக விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மூணாறு பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகள் 2 பேர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். அவர்கள் கடந்த 15-ம் தேதி முதல் 2 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. அவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என வகுப்பு ஆசிரியரும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.

பள்ளி மாணவிகள்

2 நாட்கள் கழித்து பள்ளிக்கு மாணவிகள் மிகவும் சோர்வுடன் வந்தனர். அப்போது வகுப்பு ஆசிரியை ஏன் 2 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை? விடுமுறை கடிதமும் அளிக்கவில்லை என கேட்டுள்ளார்.

அப்போது மாணவிகள் அளித்த பதிலை கேட்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்தனார். இன்ஸ்டா மூலம் தங்களுக்கு இரு வாலிபர்கள் அறிமுகமானதாகவும் அவர்கள் பேச்சை நம்பி கடந்த 15-ம் தேதி மாட்டுப்பட்டி ரோட்டில் உள்ளதனியார் லாட்ஜுக்கு அழைத்து சென்றனர்.

லாட்ஜில் அறை

அப்போது அந்த வாலிபர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கி தங்கலை 2 நாட்களாக விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் விபரீதமாகிவிடும் என எச்சரித்து மிரட்டி அனுப்பியதாக கூறினர்.

இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை மூணாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அவரது புகாரின் பேரில் மாட்டுப்பட்டியில் உள்ள சம்மந்தப்பட்ட் விடுதிக்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாட்ஜில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாணவிகள் பயன்படுத்திய செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றையும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com