ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்தடைந்தது

பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் உலக நாடுகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்தடைந்தது
Published on

புதுடெல்லி,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற் றும் இஸ்ரேல் நடத்திய போர் 2 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. ஈரான் போர் 2 வாரம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், பதற்றம் இன்னும் ஓயவில்லை. வளைகுடா பிராந்தியத்தில் போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்கும் நோக்கில் பாகிஸ்தானில் கடந்த 11-ந்தேதி நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் உலக நாடுகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன.

உலக நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோக சங்கிலியில் தடை நீடிக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியா தனது ராஜதந்திர நடவ டிக்கை மூலம் கச்சா எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரானில் இருந்து 40 லட்சம் பிப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. ஒரு கப்பல், குஜராத் மாநிலம் சிக்காவில் உள்ள துறைமுகத்திலும், மற்றொரு கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறை ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com