சொத்து பிரச்சினை: இளம்பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

ஹரிசிங்கையும் அவரது மகனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து பிரச்சினை: இளம்பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (வயது 20) என்ற மகளும், குல்தீப் (வயது 19) என்ற மகனும் இருந்தனர். இதனிடையே, ஜெகதீசுக்கும் அவரது சகோதரர் ஹரிசிங்கிற்கும் இடையே சொத்து பிரச்சினை நிலவி வந்தது. இது தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இளம்பெண் சிதலும் அவரது சகோதரன் குல்தீப்பும் இன்று காலை கல்லூரிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருவரையும், ஹரிசிங் மற்றும் அவரது மகன் இடைமறித்து சொத்து குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மறைத்து கொண்டுவந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சிதலையும், குல்தீப்பையும் ஹரிசிங் மற்றும் அவரது மகன் சரமாரியாக வெட்டினர். இந்த கொடூர தாக்குதலில் சிதலும், குல்தீப்பும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கொல்லப்பட்ட 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளம்பெண்ணையும், அவரது சகோதரனையும் கொடூரமாக கொலை செய்த ஹரிசிங்கையும் அவரது மகனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com