

திருவனந்தபுரம்,
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கைதானவர்களில் 2 பேரில் ஒருவர் பெண் ஆவார். லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.