ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை...!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை...!
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் 2 பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com