புனேவில் நடந்த கார் விபத்தில் 2 பயிற்சி விமானிகள் பலி

புனேவில் நடந்த கார் விபத்தில் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
ANI
ANI
Published on

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் கார் மரத்தின் மீது மோதியதில் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் பாரமதியில் உள்ள ரெட்பேர்ட் விமானப் பயிற்சி அகாடமியுடன் தொடர்புடைய பயிற்சி விமானிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவர்கள் நேற்று தங்கள் அறையில் ஒரு சிறிய விருந்து வைத்து மது அருந்தியுள்ளனர். இரவு உணவிற்கு பிறகு அவர்கள் ஒரு சொகுசு காரில் பிக்வானை நோக்கி வேகமாக சென்றுள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் பாராமதி-பிக்வான் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்த கிருஷ்ணா சிங் மற்றும் செஷ்டா பிஷ்னோய் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com