4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொன்ற 2 வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை

4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொன்ற 2 வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொன்ற 2 வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை
Published on

பரேலி,

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்துக்கு உட்பட்ட நவாப்கஞ்ச் பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை ஒன்று கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி காணாமல் போனது.

தலித் பிரிவை சேர்ந்த அந்த குழந்தை பின்னர் அருகில் உள்ள வயல் வெளியில் காயங்களுடன் பிணமாக கிடந்ததை அதன் பெற்றோர் கண்டுபிடித்தனர். குழந்தை கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உமாகாந்த் (வயது 32), முராரி லால் (24) என்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு பரேலி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகளான 2 வாலிபர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com