சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை (புதன்கிழமை) பதவியேற்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகள் நேற்றுடன் முடித்து வைக்கப்பட்டன.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் 9-ந் தேதி நாளை (புதன்கிழமை) பதவியேற்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார்.

கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் செலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டிஒய் சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவ.10 வரை இவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com