அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பின்னர் தங்கியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரெட்ஸ்

அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேலாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரெட்ஸ் முன்னெடுத்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பின்னர் தங்கியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரெட்ஸ்
Published on

துபாய்,

ஐக்கிய அரபு எமிரெட்ஸ் முன்னெடுக்கும் இந்த மூன்று மாத விசா பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம், மற்றும் அவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரெட்ஸில் அதிகப்பட்சமாக இந்தியாவை சேர்ந்த 2.8 மில்லியன் பேர் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரெட்ஸ் எத்தனை பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்தியா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பொதுமன்னிப்பு திட்டத்தால் பயனடைவார்கள், அவர்கள் சொந்த நாட்டிற்கு பிரச்சனையின்றி திரும்பவும் வழிசெய்கிறது.

2018 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்னதாக விசா மீறல்களில் ஈடுபட்டவர்கள் விசா பொதுமன்னிப்பு வழங்கப்படும் இந்த மூன்று மாத காலகட்டங்களில், சட்டப்பூர்வமாக தங்கள் நிலையை திருத்திக்கொள்ளலாம். அக்டோபர் மாதம் 31-ம் தேதிவரையில் பொதுமன்னிப்பு காலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com