ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியா வருகை

அதிபர் ஷேக் முகமதுவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் இந்தியா வருகை
Published on

டெல்லி,

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான். இவர் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

தலைநகர் டெல்லி வந்த அதிபர் ஷேக் முகமதுவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஷேக் முகமதுவை பிரதமர் மோடி காரில் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகை செல்கிறார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஷேக் முகமது சந்திக்கிறார். இதன் பின்னர், பிரதமர் மோடியும், ஷேக் முகமதுவும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதையடுத்து, இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது இன்றே இந்தியாவில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com