தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே இன்று சந்தித்தார்.
தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
Published on

நாக்பூர்,

மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 20-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 23-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து மும்பையில் கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவியேற்றார். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

இந்த நிலையில், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸை நாக்பூரில் விதான் பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார். அப்போது பட்னாவிஸுக்கு உத்தவ் தாக்கரே பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது உத்தவ் தாக்கரேவுடன் ஆதித்யா தாக்கரே, அனில் பராப் மற்றும் வருண் சர்தேசாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com