இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி 4ம் தேதி இந்தியா வருகை

இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி யெவெட் கூப்பர்.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி 4ம் தேதி இந்தியா வருகை
Published on

டெல்லி,

இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி யெவெட் கூப்பர். இவர் அரசு முறை பயணமாக வரும் 4ம் தேதி இந்தியா வர உள்ளார்.

இந்தியா பயணம்

முன்னதாக, நாளை சீனா செல்லும் யெவெட் கூப்பர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை முதல் 3ம் தேதி வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளும் கூப்பர் 4ம் தேதி இந்தியா வருகிறார்.

இந்தியா வரும் யெவெட் கூப்பர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com