உக்ரைன் ரிட்டர்னா...? கொரோனா சான்றிதழ் தேவை; மும்பை விமான நிலையம் அதிரடி

உக்ரைனில் இருந்து திரும்பும் இந்தியர்கள் கொரோனா பாதிப்பில்லா சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும் என மும்பை விமான நிலையம் தெரிவித்து உள்ளது.
உக்ரைன் ரிட்டர்னா...? கொரோனா சான்றிதழ் தேவை; மும்பை விமான நிலையம் அதிரடி
Published on

மும்பை,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இதற்காக இந்திய அரசும் ஏற்பாடுகளை செய்துள்ளது. ருமேனியா, போலந்து வழியே இந்திய குடிமக்களை அழைத்து வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இன்று நாடு திரும்பும் இந்தியர்களுக்காக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தனியாக ஒரு சிறப்பு தடுப்பு பகுதி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்தியா வரும் குடிமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பாதிப்பில்லா ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழை

தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

அப்படி விமான பயணியால் எந்தவொரு ஆவணங்களையும் காண்பிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு விமான நிலையத்திலேயே ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும். இதற்கான செலவை விமான நிலையமே ஏற்று கொள்ளும்.

அவர்களது பரிசோதனை முடிவில் பாதிப்பில்லை என முடிவு கிடைத்த பின் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து புறப்படலாம். யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருப்பது அறியப்பட்டால், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com