

புதுடெல்லி,
இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு தலைவர் ராபர்ட் ஜான் ரீட், சர்வதேச நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
நேற்று அவர் டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். அவரை மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வரவேற்றார்.
பின்னர், ராபாட் ஜான் ரீட், கோர்ட்டு அறையில் அமர்ந்து, கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். அவருக்கு அருகில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்ந்து இருந்தார்.