தொற்றில்லா நோய் தடுப்பு பணி; சிறப்புடன் பங்காற்றிய கேரளாவுக்கு ஐ.நா. விருது

தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது.
தொற்றில்லா நோய் தடுப்பு பணி; சிறப்புடன் பங்காற்றிய கேரளாவுக்கு ஐ.நா. விருது
Published on

திருவனந்தபுரம்,

தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது வழங்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதுமுள்ள 7 சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் தேர்வு பெற்றுள்ளது. நோய் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் இலவச சேவை ஆகிய பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கேரளா இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் இதற்காக சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, நைஜீரியா, அர்மேனியா போன்ற நாடுகளுடன் கேரள சுகாதார அமைச்சகமும் தேர்வு பெற்றுள்ளது.

இதுதெடர்பாக கேரள சுகாதார துறை மந்திரி சைலஜா கூறும்பொழுது, கொரோனா பாதிப்புள்ள காலங்களில் இறப்பு விகிதங்களை கட்டுப்படுத்தி உள்ளோம். தொற்றில்லா நோய் மீதும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தினோம். சுகாதார துறையில் அயர்வின்றி சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com