இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்..!

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்..!
Published on

புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்துள்ளார். மும்பை விமான நிலையம் வந்த குட்டரெஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார். அன்டோனியோ குட்டரெஸ் வரும் 21-ம் தேதி வரை இந்தியாவில் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com