

நியூயார்க்,
2021 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகள் காரணமாக இந்தியாவில் கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (UNHCR) வருடாந்திர உலகளாவிய போக்கு அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
வன்முறை, உணவுப் பாதுகாப்பின்மை, மனித உரிமை மீறல்கள், பருவநிலை நெருக்கடி, உக்ரைனில் போர் போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பேரழிவுகள் காரணமாக அதிகபட்சமாக சீனாவில் 60 லட்சம் பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 57 லட்சம் பேரும் அதை தொடர்ந்து மற்றும் இந்தியாவில் 49 லட்சம் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த பகுதிகளுக்குத் திரும்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.