வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு
Published on

அகமதாபாத்,

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையம் வந்த குட்டரெஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அன்டோனியோ குட்டரெஸ் இன்று மும்பை தாஜ் ஓட்டலுக்கு சென்றார். அங்கு 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, குஜராத் சென்ற ஐ.நா. சபை பொதுச்செயலாளர் குட்டரெஸ், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com