ருசியாக சமைக்காத சமையல்காரர் சுட்டுக்கொலை - உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

உத்தரபிரதேசத்தில் ருசியாக சமைக்காத சமையல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ருசியாக சமைக்காத சமையல்காரர் சுட்டுக்கொலை - உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
Published on

பரேலி,

உத்தரபிரதேசத்தின் பரேலி அருகே உள்ளது பிரேம் நகர். இந்த பகுதியின் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் சொகுசு காரில் வந்த 2 பேர் இந்த கடைக்கு வந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் ஓட்டலில் 'கபாப்' உணவை வாங்கி சாப்பிட்டார்கள்.

சாப்பிட்ட பின்பு கடைக்காரரிடம் 'கபாப்' சுவை பிடிக்கவில்லை என்று முறையிட்டு உள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்படவே அந்த நபர்கள், கடைக்காரர் சபர்வாலை தாக்கிவிட்டு, பணம் கொடுக்காமலேயே காரில் ஏறி புறப்பட தயாரானார்கள்.

இதையடுத்து கடைக்காரர், சமையல்காரர் நசீர் அகமது என்பவரை அவர்களிடம், கபாப் சாப்பிட்டதற்கான பணம் 120 ரூபாயை வாங்கி வர அனுப்பினார். அப்போது அந்த நபர்கள், சமையல்காரரை திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சமையல்காரர் நசீர் செத்தார். இது தொடர்பாக கடைக்காரர் போலீசில் புகார் அளித்தார். கார் நம்பரைக் கொண்டு காரில் வந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com