

புதுடெல்லி
நவி மும்பை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற கடத்தல் மன்னன் ரவி பூஜாரி சோட்டா ராஜனுடன் இணைந்து மும்பையில் 90களில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவரது கூட்டாளிகள் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில் ரவி பூஜாரி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். செல்போன் தொடர்பு மூலம் இருப்பிடம் தெரிய வந்ததையடுத்து இந்தியாவின் கோரிக்கையால் கடந்த ஜனவரி 22ம் தேதி செனகலில் அவர் கைது செய்யப்பட்டார். இத்தகவல் 26ம் தேதி இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டரீதியாக ரவி பூஜாரியை நாடு கடத்தி அழைத்து வர காவல்துறை உயரதிகாரிகள் சிலர் செனகலுக்கு செல்ல உள்ளனர்.