வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை - பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி

வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்று பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி பேசிய வீடியோ ஒன்றை வருண் காந்தி டுவிட்டரில் வெளியிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

அந்த பதிவில் வருண் காந்தி "வேலையில்லா திண்டாட்டம் இன்று நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாகும். நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடு வலுவாக வளரும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் வேலையில்லா திண்டாட்டம் குறித்த உரையில் தன்னுடைய கேள்விகளை குறிப்பிட்டதற்காக ஒவைசிக்கு வருண் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com