ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, அங்குள்ள கந்தர்பெல் மாவட்டத்தின் சப்ரகுங் பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினரின் பதுங்கிடத்தை குறிவைத்து கையறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குறிதவறி சாலையில் விழுந்த குண்டு வெடித்து சிதறியது. இதனால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com