

கவுகாத்தி,
திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல், வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த விவகாரங்களில் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். இதனை பாஜக ஆளும் மாநிலங்கள் தற்போது அமல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், உத்தராகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் அமலாகிறது அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா மே 25-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, அஸ்ஸாமில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும்.