மத்திய பட்ஜெட்டில் ரூ.6 லட்சம் கோடி பற்றாக்குறை - நிதியமைச்சகம் தகவல்

மத்திய பட்ஜெட்டில் ரூ.6 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
2025-26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்கள் (ஏப்ரல்-ஆகஸ்டு) முடிவில் மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.5.98 லட்சம் கோடி நிதிக் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது முழு நிதியாண்டு இலக்கின் 38.1 சதவீதம் ஆகும்.
ஆகஸ்டு மாத முடிவில் மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ.12.82 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இது ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் 36.7 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிவருவாய் குறைவே இந்த நிதி பற்றாக்குறைக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் மத்திய அரசின் வரி வருவாய் ரூ.8.7 லட்சம் கோடியாக இருந்தது.
தற்போது வரிவருவாய் ரூ.8.1 லட்சம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் மூலதனச் செலவுகள், சாலைகள்-உள்கட்டமைப்பு போன்ற முதலீட்டு துறைகளில் அதிகம் செலவிட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.






