14 வகை பயிர்கள், தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
14 வகை பயிர்கள், தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

சென்னை,

ஒவ்வொரு விற்பனை ஆண்டுக்கும் பல்வேறு கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் 2026-27ம் விற்பனை ஆண்டுக்கான பல்வேறு கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இந்த 14 வகையான பயிர்களில் பல்வேறு உணவு தானியங்கள், பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவை அடங்கும். குறிப்பாக நெல், பருத்தி, கம்பு, மக்காச்சோளம், ராகி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, நிலக்கடலை, சூரியகாந்தி எண்ணெய் வித்துக்கள், சோயாபீன் உள்ளிட்ட 14 வகையான பயிர்கள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்பது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.72 உயர்த்தப்பட்டு ரூ.2,441 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், துவரம் பருப்பின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.450 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.8,450 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

உளுத்தம் பருப்பை பொறுத்தவரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் 82,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிலக்கடலையை பொறுத்தவரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.254 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் ரூ.7,517ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் பருத்தியை பொறுத்தவரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.557 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.8,267ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com