புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com