மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய ஆரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்திமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

புதுடெல்லி

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய மூன்று முக்கிய ரெயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரெயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இலவச ரேஷன் அரசி திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com