பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com