வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு - விவசாயிகள் மகிழ்ச்சி

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

புதுடெல்லி,

கடந்த ஆண்டை விட 2023-24ம் ஆண்டில் காரீப் மற்றும் ராபி பயிர்கள் குறைவாக இருப்பதாலும், உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாகவும் வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயம் விலை உயர்ந்தது.

இதனிடையே கடந்த மாத இறுதியில் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீசியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2,000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை டன் ஒன்றுக்கு 550 டாலராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தியாளராக மராட்டிய மாநிலம் விளங்குகிறது. இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதால், மராட்டிய மாநிலத்தில் உள்ள வெங்காய உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com