ஒடிசாவுக்கு மத்திய சுகாதார மந்திரி நட்டா 11-ந்தேதி பயணம்

டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தாவுடன் சேர்ந்து ஆயுஷ்மான் கார்டுகளை பயனாளிகளுக்கு அவர் இன்று வழங்கினார்.
புதுடெல்லி,
பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் மத்திய சுகாதார மந்திரியான ஜே.பி. நட்டா நாளை மறுநாள் ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடைய இந்த 2 நாள் சுற்றுப்பயணத்தில் பொதுமக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், வெவ்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
இதன்படி, அவர் நாளை மதியம் 2.30 மணியளவில் கட்டாக் நகரில் பலிஜாத்ரா மைதானத்தில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
இதன்பின்னர் 4.40 மணியளவில் கட்டாக்கில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் முதுநிலை குழந்தைகள் மருத்துவ இயல் மையத்தில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கிறார். டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தாவுடன் சேர்ந்து ஆயுஷ்மான் கார்டுகளை பயனாளிகளுக்கு அவர் இன்று வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, 30 லட்சம் குடும்பங்கள் 7 ஆண்டுகளாக ஆயுஷ்மான் திட்ட பலன்களுக்கான உரிமை கிடைக்க பெறாதவர்களாக இருந்தனர். டெல்லி இருண்ட அத்தியாயத்தில் இருந்தது என இதற்கு முன்பு டெல்லியை ஆண்ட ஆம் ஆத்மி கட்சியை அவர் கடுமையாக தாக்கி பேசினார்.






