தேர்தல் நடக்கும் 5 மாநிலங்கள்: தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் நீக்கம்..!

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நீக்கியுள்ளது.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்கள்: தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் நீக்கம்..!
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் 5 மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை நடக்கிறது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனால் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்காரணமாக இந்த 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றத்தை கோவின் தளத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடத்தப்படும் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று நீக்கியுள்ளது. நான்கு மாநிலங்களில் மோடியின் படத்தை நீக்கிய தடுப்பூசி சான்றிதழ்களும் வெளியிடப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com